என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்"
- மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப்சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- மிஸ் மார்வல் வெப்தொடரில் ரஜினியின் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்' மற்றும் டாக்டர் ஸ்ட்ரெஞ்சு மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களை தொடர்ந்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வெப்தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
இயக்குனர் பிஷா.கே அலி இயக்கத்தில் வெளியாகியுள்ள மிஸ் மார்வெல் வெப்தொடரில் இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாட் லின்ட்ஸ், யஸ்மீன் ஃப்ளட்சர், ஷெனோபியா சோர்ஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
வாரம் ஒரு எப்பிசோடாக வெளியாகவுள்ள இந்த வெப்தொடரின் முதல் எபிசோட் இன்று (ஜூன் 8) வெளியானது. இதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'ஓ நண்பா' பாடல் ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.